History

வரலாறு
  • மத்திய மலை நாட்டின் மாத்தளை மாவட்டத்தில் நாவுல கல்வி வலயத்தில் அம்பன்கங்க கோட்டத்திற்கு உட்பட்ட கம்மடுவ என்னும் பிரதேசத்தில் கம்மடுவ தமிழ் மகா வித்தியாலயம் அமைந்துள்ளது.
  • இப்பாடசாலையானது 1926.02.05ம் ஆண்டு ஆங்கிலேய தோட்ட அதிகாரி ஒருவரினால் திறந்து வைக்கப்பட்டதாகவும் அன்றைய தினம் 33 மாணவர்கள் மாத்திரமே வருகை தந்ததாகவும் பாடசாலை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இப்பாடசாலையானது 1926ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் சம்பவத்திரட்டு புத்தகம் 1948ஆம் ஆண்டு ஜுன் 23ஆம் திகதியிலிருந்தே நடைமுறைப்பத்தப்பட்டுள்ளது.
  • இப்பாடசாலைக்கான முதலாவது கட்டிடமானது சுவீடன், ஜெர்மன் போன்ற நாடுகள் மற்றும் உலக வங்கியின் பங்களிப்பில் 1980.10.12 அன்று கௌரவ அமைச்சர் திரு.தொண்டமான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உலக வங்கியின் பங்களிப்பில் விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் பிரதான மண்டபம் என்பன உருவாக்கப்பட்டது. பின் சீடா நிறுவனத்தின் உதவியுடன் 2 மாடி கட்டடம், கலைக்கூடம் மற்றும் கணினி கூடம் என்பன உருவாக்கப்பட்டன.
  • இப்பாடசலையின் முதல் அதிபராக திரு.P. துரைஐயா கடமையேற்றார். இதனை தொடர்ந்து திருமதி. V.ஜெயலெச்சுமி, திரு.S. சிவலிங்கம், திருமதி. துரையையா, திருமதி ராணி குணபால மற்றும் திரு.V.இராஜேந்திரன் போன்றோர் அதிபராக கடமையாற்றினர்.
  • 2016ஆம் ஆண்டு முதல் இப்பாடசாலையின் அதிபராக திரு.S.ஸ்ரீதரன் அவர்கள் கடமையேற்றுள்ளார்.


No comments:

Post a Comment